இன்று பிரதோஷ நன்னாள்
திருச்சிற்றம்பலம்
<> யான் அறியேன் <>
தென்புலி யூரிலே திருநடம்
ஆடிடும்
.. தேவ!நீ தொழுமடி யாருக்(கு)
என்னையே தருவனென் றெழில்கரம்
நீட்டி
… ஈர்த்திடல் கண்டுமிப் பாரோர்
பொன்னிலும் பொருளிலும்
தம்முடைப் பொழுதைப்
.. போக்குவர் என்றுயான்
அறியேன்
முன்னைசெய் தீவினை
அத்துணைப் பெரிதோ
… மொழிவைநீ முதலினும் முதலே.
🌸🙏🏽🌸
< மனங்கொள்வீர் >
பணிபலயான் ஆற்றியுன்றன்
பாதவிணை பற்றுகையில்
பணிபலஎற்
குளவுன்னைப் பார்த்திடப்போ தில்லையெனின்
அணிபலபூண்
டருகிருக்கும் அன்னையுனைக் கடியாளோ?
மணிபலசேர்
மன்றிலுறை மன்ன!இதை மனம்வையே
.... அனந்த் 12-10-2023
No comments:
Post a Comment