Sunday, August 9, 2026

 இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

              <> இவர் தொழில் <> 

ஓடெடுப் பார்பல ஊரடை வார்தம(து) ஊர்தியென

மாடெடுப் பாரொரு மாதினை மேனியில் வைத்திருப்பார்

தோடெடுப் பாரொரு காட்டினில் ஆடிச் சுகித்திருப்பார்

ஏடெடுப் பாரொரு ஏந்திழை முடிமிசை ஏந்துவரே.

(சுகித்தல் = இன்புறுதல்; எடுத்தல் = சுமத்தல்; தேர்ந்தெடுத்தல்)

.                                                      .... அனந்த் 9 ஆகஸ்ட், 2026

திருச்சிற்றம்பலம்

ஓடெடுப் பார்பல ஊரடை வார்தம(து) ஊர்தியென

மாடெடுப் பாரொரு மாதினை மேனியில் வைத்திருப்பார்

தோடெடுப் பாரொரு காட்டினில் ஆடிச் சுகித்திருப்பார்

ஏடெடுப் பாரொரு ஏந்திழை முடிமிசை ஏந்துவரே.

(சுகித்தல் = இன்புறுதல்; எடுத்தல் = சுமத்தல்)