இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> பதத்தில் இருத்திடுவாய் <>
உனையலால் வேறொரு தெய்வம்இவ்
வேழையன் உன்னானெனும்
நினைவினை விட்டிங்கு நீமௌனத்
துள்ளே நிலைத்திருந்தால்
தனயனைக் காக்கத் தவறினன் என்றுனைச்
சார்ந்துநிற்கும்
மனையவள் உன்னை மதியா ளிதைநீ
மறந்தனையோ?
மறப்பதும் உன்னை மறந்தத னால்மீண்டும்
வந்துலகில்
பிறப்பது மேபிழைப் பாகுதல் என்றன்
பிழையென்பையோ?
அறத்தர சே!தில்லை அம்பல வா!என்னை ஆளும்ஐயே!
புறத்தொரு பாலினிப் போகா திருத்திடுன் பொற்பதத்தே.
.. அனந்த் 7-2-2024
No comments:
Post a Comment