இன்று மகாசிவராத்திரிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்
திருச்சிற்றம்பலம்
<> பாசமறுப்பாய் <>
இராப்பகல் இல்லா இறையுனக்கு யாமோர்
இராத்திரி என்றோர் தினங்குறித்தெம் நெஞ்சார
ஈசனுன்னை ஏத்தி வழிபடுவோம் எம்பந்த
பாசமற வேண்டிப் பரிந்து.
**********
<> உருகினேனே <>
உன்றிருத் தலங்களைக் காண்பதற் கென்றே
.. ஓடிவந் துற்ற என்னைக்
கன்றினைக் காணுறு தாய்ப்பசுப் போலக்
… காத்துநீ கனகம் வேய்ந்த
மன்றினைக் காட்டி மலையையும் காட்டி
… மயிலையில் அன்னை யோடு
நன்றுநின் கோலமும் காட்டிநீ ஆண்ட
.. நலத்தினில் உருகி னேனே.
**********
…அனந்த் 8-3-2024
No comments:
Post a Comment