இன்று சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> தழல் <>
துன்னுமிருள் கிழிக்குஞ் சுடுதீ அனையசடை
மன்னுமரு ளீசன் மாயை மருண்டோடப்
பொன்னொளிரு மேடை புகுந்து நடமாடித்
தன்னடியார் நெஞ்சுள் சொலிக்கும் தழலெனவே.
************
<> அருள் <>
கண்ணிலே தூசு விழுந்துநான் கரையினும்
புண்ணியா உன்றன் புகழ்நினைந் தழுவதாய்
எண்ணிடின் அலாலிவ் வீனனுன் னருள்பெறப்
பண்ணிலேன் ஏதொரு புண்ணியம் ஐயனே.
.......... அனந்த் 6-4-2024
No comments:
Post a Comment