Tuesday, June 18, 2024

 திருச்சிற்றம்பலம்


                 <> அறிகிலனே <>

guru DAKSHINAMURTHI,THATCHINAMURTHI,namakkal.jpg
 
ஏதும் அறியா ஈனனை ஈர்த்துன்னைக் காணவொரு

பாதை  அமைத்தாய் பாராமல் நானெங்கும் திரிகையிலே

ஈதே  வழியென் றியம்பி எனைக்கூட்டிச் சென்றாங்கே

ஏது(ம்) மொழியா திருந்ததனை ஏனெனயான் அறிகிலனே.

                              🙏🏻🙏🏻🙏🏻

                   <> நடிப்பதேன்? <>

      Natarajan - 4.JPG

போது சடையணி பொன்னம் பலத்தரசே

ஏது குறையுமக்கென் றிவ்வாறுஎப் – போதுமொரு

காலை மடக்கிநின்று கட்டப் படுவதுபோல்

நாலுபேர் முன்னால் நடிப்பு? 

..... அனந்த் 19-6-2024

Tuesday, June 4, 2024

உன்னருள் திறம்