இன்று பிரதோஷ நன்னாள்
திருச்சிற்றம்பலம்
<> உன்னருள் திறம் <>
சதுராடும் ஐய!உனைச் சாருமடி யார்பால்
எதிர்பார்க்கும் நற்குணங்கள் ஏதும் – பதரனையேற்(கு)
இன்றென் றறிந்துமெனை ஏற்றாய் இதற்கெங்ஙன்
நன்றி நவில்வேனோ நான்.
சேற்றில் விழுந்து கிடந்தேனைத் தில்லைத் தேவே நீஇரங்கி
ஊற்றுக் கோல்தந் துதவியுன்தாள் உறுமா றிட்டாய் உன்னருளை
ஏற்கத் தகுதி இல்லேனுக் கிங்ஙன் இரங்கும் ஈச!உன்போல்
வேற்றோர் தெய்வம் மேதினியில் உண்டோ விளம்பற் கறியேனே.
…அனந்த் 4-6-2024
No comments:
Post a Comment