Sunday, May 19, 2024

                                              இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

 

திருச்சிற்றம்பலம்






                                                         <> இப்படியும் ஒருவர்! <>

 

மடியில் இருபாலர் மங்கையொரு பாலர்

 

குடியில் ஒருமூவர் மூவர் குடியில்

 

இவர்ஒருவர் ஈடில் ஒருவரிவர் கீழே

 

தவத்தவர் தாம்நால்வர் காண்.

 

(பொருள் விளக்கம்: சிவபெருமான் மடியில் இருபாலகர்களையும் உடலிலொரு பாகத்தில் மனையாளாகிய உமையையும் கொண்டவர்; ஆக இவர் குடும்பத்தில் மூவர் உளர். பிரமன், திருமால் ஆகியோருடன் இவரையும் சேர்த்து மூவர் என உலகோ வழிகாட்டிரால் அழைக்கப்படுபவர்; இவர் தமக்கு இணையில்லாத ஒருவர்; (தட்சிணாமூர்த்தி குருவாக இவர் ஆலின் அடியில் அமர்ந்திருக்க, இவர் கீழே சனகர், சனாதனர், சனந்தர், சனத்குமாரர் என்னும் நான்கு தவசிகள் இருப்பர்.) 

 

 



No comments: