இன்று பிரதோஷ நன்னாள்
திருச்சிற்றம்பலம்
<> துணையடி சேர்ப்பாய் <>
வெண்மதி கங்கை கொன்றை
.. விளங்கிடும் சடையோய்! உன்றன்
கண்கவர் கோலம் கண்டும்
.. கருத்திலோர் நெகிழ்வு மின்றி
மண்ணிலோர் விலங்காய் வாழ்ந்த
.. வகையினை இன்றென் நெஞ்சில்
எண்ணிநான் வருந்தி உன்றன்
..
இணையடி
சேர்ந்தேன் ஐயே!
🌹🌹🌹
ஐயனே ஐயோ வென்றுன்
.. அடியிணைக் கீழ்வி ழுந்தேன்
பொய்யனே ஆயி னும்மென்
.. பிழையெலாம் பொறுப்பாய் என்று
மெய்யடி யார்கள்
சொல்லல்
.. மிகையிலை என்று நம்பிக்
கையிணை குவித்துன் முன்னே
… கதறினேன் காத்தி டாயோ?
ஆயபல் பிழைகள் யாவும்
… ஆக்கிய பிண்ட மாகக்
காயமொன் றுடையேன் பாவக்
.. காற்றையே நிரப்பி வைத்த
தீயதோர் பாண்ட மிஃதைச்
.. சுமந்துல கலையு மென்னைத்
தூயவ னாக்கி உன்றன்
… துணையடி சேர்த்தி டாயோ?
🌹🌹🌹
..அனந்த் 4/5-5-2024
No comments:
Post a Comment