Friday, October 17, 2025

இன்று சனிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

                திருச்சிற்றம்பலம்

               <> தாள் வீழ்வோம்<>


             


மன்றில் நடமாடும் மன்னன் மனங்கனிந்து


இன்றுவரை நம்மையெலாம் இவ்வுலகில் - நன்றாக


வாழ்வித் தவன்பேர் மறவாமல் வைத்துள்ளான்

தாழ்ந்தவன்தாள் வீழ்வோம் தினம்.



.........           அனந்த் 18-10-2025


Friday, October 3, 2025


இன்று சனிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்


                     திருச்சிற்றம்பலம்


                  <> கூலி தருவாய் <>

         


எப்போதும் ஏத்திப் பணியும் அடியவர்க்குத் 


தப்பாது காசுதரும் சாமிஉனை – ஒப்புக்குப் 


பேசிப் புகழ்ந்துபிறர் முன்நடிப்பேன் என்பணிக்கும் 


காசுதரல் வேண்டும் கனிந்து. 


 (ஒப்புக்கு = போலியாக
)