<> ஆற்றல் அளிப்பாய் <>
திருச்சிற்றம்பலம்
வலிவந்த வேளையென் வாழ்க்கையின் நோக்கம்
வலுவிழக்க வொட்டாது நெஞ்சத் – தவிப்பிதுதான்
ஆர்க்காம் எனவினவும் ஆற்றலை என்னுள்ளே
வார்க்காயோ அண்ணா மலை.
….அனந்த் 30-1-2026
திருச்சிற்றம்பலம்
<> ஈர்த்திடுவாய் <>
பார்க்குமிட மெங்கு(ம்)நீ பரந்தொளிர் பாங்கினைப்
….. பாவியேன் அறிந்திலேனே
நீர்க்குமிழி அன்னவிவ் வாழ்க்கையை முற்றிலும்
… நிலையென நிற்குமேழைக்(கு)
ஆர்த்திடுபொற் சிலம்பொடு ஐயநீ தில்லையில்
… ஆடிடும் அழகுகாட்டி
ஈர்த்தெனைஆட் கொண்டிட ஈதுநற் றருணமாய்
… எண்ணிநீ காத்திடாயோ.
..அனந்த் 15-1-2026