Wednesday, April 24, 2013

23-4-2013 எனக்கோர் இடம்

திருச்சிற்றம்பலம்

 

<> எனக்கோர் இடம் <>


உன்றன் உடலில் ஒருபாதி
உமைக்குத் தந்து சடைமுடியை

அன்று கங்கைக் கீந்துவிடம்
.. அடக்க மிடற்றை அளித்(து)அமரர்

சென்று வணங்கிச் சேவிக்கத்
.. திருத்தாள் தந்தாய்; தந்தாய்!நீ

என்ற னுக்குன் அடிநிழல்கீழ்
இருக்க இடமொன்(று) ஈயாயோ?


அனந்த் 23-4-2013

7-4-2013 அழுகையும் தொழுகையும்

திருச்சிற்றம்பலம்















<>  அழுகையும் தொழுகையும் <>



அருத்தமே இல்லா வாழ்வென நினைத்(து)அன்(று)


.. அகங்குழைந் தழுதஅவ் வேளை




நிருத்தமே  காட்டி ஈர்த்தெனுள் புகுந்து  


.. நிமல!நீ அருளிய காலப்  




பொருத்தமே கண்டு வியக்கையில் உன்றன்  


.. புகழினைப் பாடவும் வைத்து




வருத்தமே வாரா வாழ்வினை வகுத்த

.. வண்மையை உன்னிஇன்(று)ழுமே.



.. அனந்த்  7-4-2013