திருச்சிற்றம்பலம்
<> எனக்கோர் இடம் <>
உன்றன் உடலில் ஒருபாதி
… உமைக்குத் தந்து சடைமுடியை
அன்று கங்கைக் கீந்துவிடம்
.. அடக்க மிடற்றை அளித்(து)அமரர்
சென்று வணங்கிச் சேவிக்கத்
.. திருத்தாள் தந்தாய்; தந்தாய்!நீ
என்ற னுக்குன் அடிநிழல்கீழ்
… இருக்க இடமொன்(று) ஈயாயோ?
அனந்த் 23-4-2013
No comments:
Post a Comment