திருச்சிற்றம்பலம்
<> அழுகையும் தொழுகையும் <>
அருத்தமே இல்லா வாழ்வென நினைத்(து)அன்(று)
.. அகங்குழைந் தழுதஅவ் வேளை
நிருத்தமே காட்டி ஈர்த்தெனுள் புகுந்து
.. நிமல!நீ அருளிய காலப்
பொருத்தமே கண்டு வியக்கையில் உன்றன்
.. புகழினைப் பாடவும் வைத்து
வருத்தமே வாரா வாழ்வினை வகுத்த
.. வண்மையை உன்னிஇன்(று) அழுமே.
.. அனந்த் 7-4-2013
No comments:
Post a Comment