திருச்சிற்றம்பலம்
<> திருத்தாள்
<>
ஒருகா லேனும்
உன்னைஎன்றன்
.. உள்ளத்
திருத்த உதவு(ம்)வணம்
ஒருகால்
பதித்து மற்றொருகால்
..
உயர்த்திக் காட்டி உணரவைத்தாய்
வருகா
லமெலாம் உன்னிருதாள்
.. மனத்துள்
வைப்பேன், வருமெமனை
ஒருகா லாலே
உதைத்தவ!நின்
.. ஒப்பில்
கருணை அளப்பரிதே!
இருமா துகந்தோய்! அடியர்உளத்(து)
..இருத்த இருதாள் இசைந்தளிப்பாய்
இருமா வுரிபோர்த்(து) இடர்விளைக்கும்
.. இருவி னைகள் பாறவைப்பாய்
இருமா முனிவர் உனதருகே
.. இருந்துன் நடனம் காணவைப்பாய்
ஒருகால் இருகால் பலகால்நான்
.. ஓல மிடுங்கால் ஓடுவதேன்?
முக்கால் உணர்ந்த முனிவோர்கால்
..முடங்கா துயர்த்தித் தவம்செய்தும்
முக்கண் ணாஉன் திறமெல்லாம்/ திருஉருவை
.. முழுதும் உணரா திருக்கையிலே
புற்கண் படைத்த பேதையுன்சீர்
.. புரியும் வகையாய்ப் புலியூரில்
கற்கண் டாய்நின் வடிவழகைக்
.. காணச் செய்த கருணைஎன்னே!
(பாற=
நீங்க, ஓட; கால் முடங்காது = மூச்சுக் காற்றைச் சுழுமுனை வழியே நேராகச் செல்லுமாறு)
5-7-2013
(யாப்பு: அறுசீர் ஆசிரிய விருத்தம்; பாறவைப்பாய் = ஓட/நீங்க வைப்பாய்; கால் முடங்காது = மூச்சுக் காற்றைச் சுழுமுனை வழியே நேராகச் செல்லுமாறு; இருமா முனிவர்= பதஞ்சலி, வியாக்கிரபாதர் என்னும் இரு முனிவர்கள்; முனிவரர்= முனிவர்களில் சிறந்தோர்; மூன்றாம் பாடலில் இனஎதுகை பயிலும்).
No comments:
Post a Comment