திருச்சிற்றம்பலம்
<> வேடம் புனைவீர் <>
ஓரொருகால்
ஊரரெல்லாம் ஓடேந்தி இரந்துண்பீர்
வேறொருகால்
கூடலில்நீர் வீறுடனே வேந்தனெனச்
சீரொளிரும்
முடியணிவீர்; சிறுபொழுதில், இரந்துண்ணப்
பாரெல்லாம்
திகம்பரனாய்ப் பகற்பொழுதில் சென்(று)இரவில்
யாருமிலாக்
காட்டினிலே ஆடிடுவீர், பின்னர்மர
வேரடியில்
வாய்மூடி வீற்றிருப்பீர் ஐய!உமை
ஓருருவில்
நான்துதிக்க வொட்டீரென்(று) எண்ணுகையில்
யாருமறி
யாதென்றன் அகத்துள்நிலை கொண்டிடுவீர்!
அனந்த் 2-1-2015
இணைத்துள்ள ஓவியம், கவிஞர் சு.ரவி வரைந்தது.
No comments:
Post a Comment