Tuesday, March 3, 2015

ஒன்றிட அருள்வாய்





திருச்சிற்றம்பலம்


<> ஒன்றிட அருள்வாய் <> 


கல்லாலின் நீழலிலோர் சொல்லேனும் சொல்லாமல்
... கைச்சாடை மூலம் எங்கும்

இல்லைஇதை அன்றியொரு எல்லையறு வத்துவெனும்
... ஏகபர தத்து வத்தை

நல்லோர்கள் முன்னிலையில் வல்லோன்நீ நாட்டியதை
... நாயேனும் உணர என்னைக்

கொல்லாமல் கொன்றுன்னோ(டு) ஒன்றாகும் ஓர்நிலையில்
.. கொண்டுவிடக் குறித்தி டாயோ?

(கொல்லாமல் கொல்லுதல் = உடல், மனம், அகந்தை இவற்றோடு சீவனுக்கு  உள்ள தொடர்பு உணர்வை மெய்ஞ்ஞான போதத்தால் நீக்குதல்;
எழுசீர் ஆசிரிய விருத்தம்; 1,5 சீர் மோனை; 1-3 அடிகளில் 1,3 சீர் 4-வது அடியில் 2,3 சீர் இயைபெதுகை)

.. அனந்த்   2-3-2015

No comments: