திருச்சிற்றம்பலம்
<> வாய்ப்புக் கிட்டும்! <>
குவிக்குமென்
கரமிரண்டின் ஊடே சென்று
.. கூத்தனே!
என்நெஞ்சத் தமர்ந்தாங்(கு) என்னைத்
தவிக்கவைத் திடும்வினைகள்
கூட்டத் தைநீ
.. தகர்த்தழித்
திட்டுன்றன் நினைப்பை நட்டால்
புவிக்குளே மாந்தர்நின்
செயலைக் கண்டு
.. புகழ்ந்திடும்
சொல்உன்னில் பாதி கொண்டாள்
செவிக்குளே செல்லும்போ(து)
அவள்ம கிழ்ந்து
.. சிரிப்பதை
நீகாணக் கிட்டும் வாய்ப்பே!
.. அனந்த் 1-4-2015
No comments:
Post a Comment