இன்று சனிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> உள்ளம் கொள்வாய் <>
மூப்பினால் தளர்ந்தென்றன் உடலம் தன்னில்
... மூண்டிடும் நோய்களினின் றென்னை நித்தம்
காப்பதுன் கடனென்று கயிலை வாசா!
... கருத்தினில் இருத்தி,அதன் மேலும் பின்னாள்
மாப்புடன் கூற்றுவன்றன் வாக னத்தில்
.. வந்தெனை வாவென்னும் வேளை யில்நான்
கூப்பிடும் போதிவனென் அன்பன் என்று
.. குறித்தெனை மீட்பதையும் உள்ளில் கொள்ளே.
(மாப்பு = மிகுதி, இங்கு, இறுமாப்பு என்று பொருள் கொள்க)
.... அனந்த் 30-5-2015
படம்: கௌரி தாண்டவர் - நன்றி: ”நடராசப் பெருமான்”- திருவாவடுதுறை ஆதீனம் சரசுவதி மகால் நூல்நிலைய ஆய்வு மையம்