திருச்சிற்றம்பலம்
<> மீண்டும் வாராயோ? <>
கட்டிப் பிடித்துனைக் கணமு(ம்)வில காதுமனக்
....கோட்டையின் உட்பு றத்தில்
.....களிப்புமீ தூரநான் காத்துவரும் போதிலே
........கனகசபைச்
செல்வ மே!என்
..........கண்ணி(ல்)மண் தூவியே காணாமல் சென்றனை
............கடவுள்நீ இருந்த இடத்தில்
துட்டத் தனத்தவர் சுற்றமொடு குடியேறச்
....செய்தெனை வாட்டு முன்றன்
......சோதனை தன்னிலே நீகண்டு வருகின்ற
........சுகம்யாது
கூறு வாயோ?
……..தொடர்ந்துநீ இங்ஙனம் செய்யும்இதைக் காணுவோர்
……..தொடர்ந்துநீ இங்ஙனம் செய்யும்இதைக் காணுவோர்
...............சொல்பழியைக் கேட்டி டாயோ?
கட்டம் மலிந்தஇக் காசினியில் உழலுவதைக்
....கடந்திட வேண்டி யுன்றன்
… ..கழலடி நிதம்பணிந் தேத்திடுமுன் அடியவர்
.........குறையெல்லாம் தீர்ப்ப துன்றன்
….........கடமையென்(று) உணர்ந்துநீ மீண்டுமென்றன்
நெஞ்சுளே
..............கடிதிலே
புகுந்தி டாயோ?
நட்டம் தன்னிலே நாளெல்லாம் கழித்திடலால்
....நான்சொலும் வார்த்தை யில்உன்
…....நாட்டமும் இல்லையோ? நியாயமும்ஈ தாகுமோ?
........நாதன்நீ இலாமல் இங்கே
…........நானினி வாழ்வதில் பயனேதும் உள்ளதோ?
.............நாடியெனுள் வதிந்தி டாயோ?
{21-சீர் ஆசிரிய விருத்தம். வாய்பாடு:
தேமா விளம் காய் காய் விளம் மா தேமா
.. விளம் விளம் காய் விளம் காய் மா தேமா
... விளம் விளம் காய் விளம் காய் மா தேமா}
அனந்த்
5-2-2016
No comments:
Post a Comment