திருச்சிற்றம்பலம்
<> விந்தை செய்வாய் <>
வண்ணப் பாடல். சந்தக் குழிப்பு: தனதனன தனதனன தானத் தானத் தனதான
(தாளம்: தகதகிட தகதகிட தகிட தகிட தகதிமிதக)
திருப்புகழ்: ஒருபொழுது மிருசரண.....
அனவரத முலகசுக நாடித் தேடித் திரிவேனே
... அரனுனது கமலமெனுந் தாளைச் சேவித் தறியேனே
கனகசபை மிசைநடன மாடிப் பாலித் தருள்வோனே
… கருணைமிகு மிறைவனெனும் பேரைக் காக்கக் கடிதேகி
இனமுமிவ னிழிநிலையில் வாழத் தேவைப் படலாமோ
.. எனவுனது மனமிளகி நேயத் தோடிக் கணம்வாராய்
அனையவளு மரியுமய னாரிப் பேதைக் கிதுபோல
.. வருளுவதொ ரதிசயமென் றோதச் சீரைத் தருவாயே
பதம் பிரித்து:
அனவரதம் உலகசுகம் நாடித் தேடித் திரிவேனே
... அரன்உனது கமலம்எனும் தாளைச் சேவித்து அறியேனே
கனகசபை மிசைநடனம் ஆடிப் பாலித்து அருள்வோனே!
… கருணைமிகும் இறைவன்எனும் பேரைக் காக்கக் கடிதுஏகி
இனமும்இவன் இழிநிலையில் வாழத் தேவைப் படலாமோ
.. எனஉனது மனம்இளகி நேயத் தோடுஇக் கணம்வாராய்
அனைஅவளும் அரியும்அய னார்இப் பேதைக்கு இதுபோல
.. அருளுவதுஒர் அதிசயம்என்று ஓதச் சீரைத் தருவாயே
( அனவரதம் = எப்போதும்; பாலித்து = காத்து; இனமும் = இன்னமும்; அனை= அன்னை என்பதன் சுருக்கம்.)
. அனந்த் 16-7-2016
No comments:
Post a Comment