திருச்சிற்றம்பலம்
<> நாடல் <>
******
<> நாடல் <>
ஒளியை உமிழும் வெண்மதியும்
… உலவும் புனலும் சடைநாட
நெளியும் மின்ன லனையரவம்
.. நிமிர்ந்த மார்பம் தனைநாட
அளியின் உருவாம் அன்னையவள்
.. ஆகத் தரைப்பங் கினைநாட
எளியன் அரனுன் இணையடியை
.. என்பங் கெனவே நாடுவனே.
(அனை அரவம் = அனைய அரவம்; மார்பம் = மார்பு; அளி = கருணை; ஆகத்தரை = ஆகத்து
அரை; மேனியில் பாதி)
<> மேலோன் <>
சடையும் அதன்மேலொரு மலரும்
… சலமும் அதன்மேலொளிர்
மதியும்
உடையும் அதன்மேல்நெளி அரவும்
.. உடலும் அதன்மேலுறை உமையும்
விடையும் அதன்மேலமர் எழிலும்
.. விரவும் அரன்மேலொரு பரிவை
உடையோர் அவர்மேல்வளர் உறவும்
.. உறுமின் அதன்மேலெதும் இலையே.
அனந்த்
14-9-2016
No comments:
Post a Comment