Friday, August 18, 2017

திருவடிப் பெருமை

                 திருச்சிற்றம்பலம்

            <> திருவடிப் பெருமை <>

       

















நின்னடி காண நெடுமால் இயன்றிலன் நேயமுடன்
பன்னெடுங் காலம் பரவினர் கண்டிலர் பத்திசெய்த
சின்னவொர் பாலனின் சீவன் பறிக்கச் சினந்துவந்த
வன்னெமன் கண்டனன் மன்னவநீசெயும் மாயமென்னே.
                                    *****

       
​​











மாயை விலக்கும் மருந்தெனச் சாற்றுமுன் மாவடிக்கீழ்
தோயும் சுரர்தம் முடியெனச் சொல்வர் துதிப்பதற்கு
வாயில் புனலொடு வந்தவொர் வேடன் மிதியடியைத்
தாய்மக வின்மிதி தாங்குவ தொப்பத் தரித்ததென்னே!
                                    *****























காலற்குன் காலுமந்தக் காமற்குக் கண்ணும்விண்
பாலலைந் தோர்க்குனது புன்சிரிப்பும் – சாலப்
பரிந்தளித்தாய் நீஎனக்குப் பாருள் இரக்கத்
திரிகையிலுன் தாள்தூசி தா.

விண்பால்… புன்சிரிப்பும்திரிபுர சம்ஹாரத்தைக் குறிப்பதுபரிந்தளித்தாய் –  தண்டித்தருளுவதைக் குறித்ததுதாள்தூசிபுணர்ந்தபின்தாட்டூசி.)
                                    *****
       




















அடியார் எனும்சிலர் ஐயனேஉன்னை
அடிப்பார் செருப்பால்கல் வில்லால் – அடியேன்நான்
உன்னை அடியேன் உவந்துன் அடியிணையை
என்னுள்ளே வைப்பேன்இரு.

..அனந்த் 19-8-2017 சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்

1 comment:

Anonymous said...

Normally I do not read article on blogs, however I would like to say that this write-up very pressured me to try and do so!
Your writing style has been amazed me. Thank you, very
great article.