இன்று பிரதோஷ நன்னாள்
திருச்சிற்றம்பலம்
நின்னடி காண நெடுமால் இயன்றிலன் நேயமுடன்
பன்னெடுங் காலம் பரவினர் கண்டி லர் பத்திசெய்த
சின்னவொர் பாலனின் சீவன் பறிக் கச் சினந்துவந்த
வன்னெமன் கண்டனன் மன்னவ! நீசெயு ம் மாயமென்னே.
மாயை விலக்கும் மருந்தெனச் சாற் றுமுன் மாவடிக்கீழ்
தோயும் சுரர்தம் முடியெனச் சொல் வர் துதிப்பதற்கு
வாயில் புனலொடு வந்தவொர் வேடன் மிதியடியைத்
தாய்மக வின்மிதி தாங்குவ தொப் பத் தரித்ததென்னே!
காலற்குன் காலுமந்தக் காமற்குக் கண்ணும்விண்
பாலலைந் தோர்க்குனது புன்சிரிப் பும் – சாலப்
பரிந்தளித்தாய் நீஎனக்குப் பாரெ ல்லாம் ஏற்றில்
திரிந்திடுமுன் தாட்டூசி தா.
(விண்பால் அலைந்தோர் = விண்ணில் மூன்று கோட்டைகளில் (திரிபுரம்) அலைந்த அசுரர்கள்; பரிந்தளித்தாய் – த ண்டித்தருளுவதைக் குறித்தது; தா ட்டூசி = தாள்தூசி.)
அனந்த் 17-10-2017
No comments:
Post a Comment