திருச்சிற்றம்பலம்
இரண்டற்ற ஒன்றென எங்குமாய் இருந்தநீ எந்தவோர் கார ணத்தால்
.. இறைவன்நீ சீவன்யான் என்றதோர் தோற்றமிங் கென்னுளே புகுத்தி அதனால்
புரண்டிந்த மண்மிசைப் பிறந்துநான் எனதெனப் புந்தியில் புகுந்த நினைப்பால்
… புவியுளோர் முன்னொரு பித்தனாய்த் திரிந்திடும் புன்மையைக்
கூட்டிவைத்தாய்?
திரண்டுற்ற பிறவியில் சேர்த்திட்ட பாவங்கள் சீவனாம் என்னையுன்பால்
…சேரொணா வகையினில் செய்திடும் கொடுமையைச் சற்றுநின் சிந்தைதாங்கி
இரண்டென்னும் மாயையை இறந்திடச் செய்தெனை உன்னுடன் கலக்க வைப்பாய்
… ஈசனே! தில்லைபால் என்னையும் ஈர்த்தநீ இதனையும் செய்கு வாயே!
..அனந்த் 28/29-3-2018 (பிரதோஷ நன்னாள்)
..அனந்த் 28/29-3-2018 (பிரதோஷ நன்னாள்)