Wednesday, March 28, 2018

விளையாட்டும் விளைவும்


                 திருச்சிற்றம்பலம்              

<> விளையாட்டும் விளைவும் <>


இரண்டற்ற ஒன்றென எங்குமாய் இருந்தநீ எந்தவோர் கார ணத்தால்
.. இறைவன்நீ சீவன்யான் என்றதோர் தோற்றமிங் கென்னுளே புகுத்தி அதனால்

புரண்டிந்த மண்மிசைப் பிறந்துநான் எனதெனப் புந்தியில் புகுந்த நினைப்பால்
புவியுளோர் முன்னொரு பித்தனாய்த் திரிந்திடும் புன்மையைக் கூட்டிவைத்தாய்?

திரண்டுற்ற பிறவியில் சேர்த்திட்ட பாவங்கள் சீவனாம் என்னையுன்பால்
சேரொணா வகையினில் செய்திடும் கொடுமையைச் சற்றுநின் சிந்தைதாங்கி

இரண்டென்னும் மாயையை இறந்திடச் செய்தெனை உன்னுடன் கலக்க வைப்பாய்
ஈசனே! தில்லைபால் என்னையும் ஈர்த்தநீ இதனையும் செய்கு வாயே!

..அனந்த்  28/29-3-2018 (பிரதோஷ நன்னாள்)
 

No comments: