திருச்சிற்றம்பலம்
ஆடிக்கொண் டேயிருப்பாய் அம்பலத்தில், ஆனேறி
.. அண்டமெலாம் சுற்றிடுவாய், அன்றாட ஊணுக்காய்
ஓடிக்கொண் டேஇருப்பாய் ஓயாமல் இவ்வண்ணம்
.. ஓரிடத்தில் நில்லாத உமைபாகா! உன்னைநான்
தேடிப்பி டித்தென்றன் சிந்தையுள்ளே நிலைநிறுத்தச்
... செய்வதுந்தான் சாத்தியமோ? சிவலோக வீட்டினைநான்
நாடிப்பி டித்திடல்எந் நாளோ?ஓர் கணமிந்த
.. நாயேனின் நிலையுணர்ந்தென் நெஞ்சுள்ளே நிலையாயோ?
அனந்த் 7-3-2020 (சனி மகாப்பிரதோஷ நாள்)
No comments:
Post a Comment