திருச்சிற்றம்பலம்
<> அருட்கனி <>
விண்ணிலுறை கற்பகத்தின் மேற்கொம்பில் எண்ணிடிசையும்
.. விரைகமழத் தொங்கிநிற்கும் வீங்குசுவைக் கனியொன்றை
.. விரைகமழத் தொங்கிநிற்கும் வீங்குசுவைக் கனியொன்றை
மண்ணிலுறை ஒருமுடவன் மனத்தெண்ணி அதையுண்ண
.. வாய்திறந்து நின்றிருத்தல் மடமையென ஏசுதல்போல்
.. வாய்திறந்து நின்றிருத்தல் மடமையென ஏசுதல்போல்
பண்ணுறையும் அம்பலத்தே பரசிவமாம் தருவதனில்
.. பழுத்திருக்கும் அருட்கனியைப் பறித்துண்டு களித்திடநான்
.. பழுத்திருக்கும் அருட்கனியைப் பறித்துண்டு களித்திடநான்
எண்ணுவதென் பிழையெனினும் ஏழையென்றன் பசிதீர்த்தல்
..ஈசனெனப் பேர்படைத்தோய்! ஏலாதோ உன்றனுக்கே?
..ஈசனெனப் பேர்படைத்தோய்! ஏலாதோ உன்றனுக்கே?
(எண்சீர் விருத்தம்; அரையடி- தேமாங்காய் காய் காய் காய்)
... அனந்த் 20-3-2020
No comments:
Post a Comment