Saturday, April 4, 2020

வழி

 திருச்சிற்றம்பலம் 

                                 <> வழி <>

Siva dance with agni.jpg          Nataraaja n Sivakami 3.jpg


ஊனார் உடலை
நானென் றெண்ணி
நானா வழியிற் சென்றேனைத்
தானாய் என்றன்
கோன்முன் தோன்றி
வாஇங்(குஎனவே அழைத்தனனே

ஏனோ அவன்சொல்
தேனாய் இனிக்க
நானும் அவன்பால் நாடுங்கால்
தேனார் மொழியாள்
தானோர் பங்கன்
கானை நோக்கி நடந்தாங்கே

எரியில் வெந்து
கரியும் உடல்கள்
நரிகள் பேய்கள் நடுவேதன்
விரிசெஞ் சடையில்
சொரிநீர் தெறிக்க
ஒருகூத் ததனைக் காண்பித்தான்

தன்னை மறந்தென்
முன்னர்க் காணும்
அன்னான் உருவில் திளைத்தேனை
இன்னும் உளதென்
பின்னர் வாவென்(று)
என்னை அழைத்துத் தில்லைப்பொற்

பதியை அடைந்து
மதிசேர் சடையன்
அதிஅற் புதமாம் மன்றில்தன்
சதிரா டிடுமோர்
பத(ம்)முன் காட்டி
இதுவுன் வழியென் றேமீண்டான்!  
  
அனந்த் 5-4-2020 (பிரதோஷம்)

No comments: