திருச்சிற்றம்பலம்
<> தகுதியில்லோன் <>
வானந்த வரைதாண்டி மெஞ்ஞான வெளியினிலே
… மானாபி மானமின்றித் தானாகி நிற்பவனைத்
தானந்த மில்லாத தத்துவனை மெய் யறிவைத்
.. தந்தோம்காண் எனநடத்தில் சமிஞ்ஞைவழி தெரிவிக்கும்
ஆனந்தத் தாண்டவனை அணிதில்லைப் பதியனைத்தம்
… அகமுருகிக் கண்பனிக்கும் அடியார்முன் அறிவில்லா
நானெந்த வகைகொண்டு நாடியென்றன் மனத்துறைய
…. நாதா நீ வருகவென அஞ்சாமல் அழைத்திடுமே?
(எண்சீர் ஆசிரிய விருத்தம்; அரையடி: தேமாங்காய் காய் காய் காய்.),
.. அனந்த் 31-7-2020