சிந்தை கொள்வாய்
அருகதையோர் துளிஉடையன் அல்லேன் ஆயின்
.. அரனுனது பெயர்கேட்ட அன்று தொட்டே
உருகியொரு
முறையேனும் உளத்தால் நாயேன்
.. உரைத்திருக்க வாய்ப்புண்டென்(று) ஊகித் துன்றன்
திருவருளைப்
பொழிந்திடநீ சிந்தை கொண்டால்
.. திருந்திஇனி உளநாளில் தினமும் உன்றன்
திருவடிக்கீழ்க் கிடந்துருண்(டு) என்னைத் தேய்ப்பேன்
.. தீவினைகள் தீரும்வரை தில்லைத் தேவே.
... அனந்த் 15-3-2022
No comments:
Post a Comment