திருச்சிற்றம்பலம்
இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
<> பூரணன் <>
திருச்சிற்றம்பலம்
குங்கும நிறத்தான் குழையணி செவியான்
.. குறைமதி புனைந்தான் காணுமிடம்
எங்குமி ருப்பான் எனதுளம் புகுந்தே
.. எனையழித் தமர்ந்தான் எண்ணரிய
கங்குலும் பகலும் கடந்திடின் என்னே
… கணக்கிட இங்கே யாருளர்காண்
அங்குமிங் கெங்கும் அனனிய மாக
… ஆனபின் அனைத்தும் பூரணமே.
(அனனியமாக = இரண்டற்றவாறு)
. அனந்த் 5-12-2022
No comments:
Post a Comment