இன்று பிரதோஷ நன்னாள்
திருச்சிற்றம்பலம்
<> தத்துவன் <>
சித்தத்துள் ளேசிவம் நாடி அறிந்திடும்
சீரடியார்
அத்தனை சீவர் அகத்துளும் ஐயன்
அமர்ந்திருக்கும்
வித்தகம் காண்பார் வியப்பார்
அதனினும் வேறெனவோர்
முத்தியை நச்சார் மவுன நிலையினுள் மூழ்குவரே.
நானென நம்முள்ளே என்றும் இலங்கும் நிசஉணர்வு
தானொரு கட்டிலாச் சத்தியம் அஃதே சபைநடுவே
மானிடர் காண வடிவெடுத் தாடிடும் வான்புலியூர்க்
கோனெனக் கண்டு குறுகுமின் அன்னோன் குரைகழலே.
... அனந்த் 19-1-2023
No comments:
Post a Comment