இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> சித்தம் கொள்வாய் <>
சாவதும் மீண்டும் சனிப்பதும் ஆய
சதிக்கிரையாய்
ஆவதென் றென்னுள் அறிந்தும்
அரனுன் அடியிலொரு
பூவது கொண்டுயான் பூசித்
திலனிப் புவிவிடுத்துப்
போவதன் முன்னமுன் பொற்றாள்
அடிக்கீழ்ப் புகுத்துவையே
பிறந்த கணமே இறக்கத் துவங்கும்
… பீற்றை உடலிதனைச்
சிறந்த தென்ற சிந்தை கொண்டு
… சிறியேன் பெருமஉனை
மறந்து நின்று வாழ்வைக் கழித்து
… மாயும் முனம்அருட்கண்
திறந்திவ் வெளியேன் தனைநீ
மீட்கச்
.. சித்தம் கொள்ளுவையே.
அனந்த் 18/19-3-2023