Saturday, March 18, 2023

இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம்

 

                     <> சித்தம் கொள்வாய்  <>

 

         

சாவதும் மீண்டும் சனிப்பதும் ஆய சதிக்கிரையாய்

ஆவதென் றென்னுள் அறிந்தும் அரனுன் அடியிலொரு

பூவது கொண்டுயான் பூசித் திலனிப் புவிவிடுத்துப்

போவதன் முன்னமுன் பொற்றாள் அடிக்கீழ்ப் புகுத்துவையே 

 

பிறந்த கணமே இறக்கத் துவங்கும்

 பீற்றை உடலிதனைச்

சிறந்த தென்ற சிந்தை கொண்டு

 சிறியேன் பெருமஉனை

மறந்து நின்று வாழ்வைக் கழித்து

 மாயும் முனம்அருட்கண்

திறந்திவ் வெளியேன் தனைநீ மீட்கச்

.. சித்தம் கொள்ளுவையே.

 

அனந்த் 18/19-3-2023

 

No comments: