திருச்சிற்றம்பலம்
இன்று சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்
<> பிடியகற்றும் வழி <>
<> பிடியகற்றும் வழி <>
கடலின் அடியில் கரந்துறைந் தாலும்
…ககனந் தாண்டிக் கடந்துசென் றாலும்
அடவித் திரளுள் மறைந்திருந் தாலும்
..அணுவைத் துளைசெய் தாங்கிருந் தாலும்
உடலம் நானென் உளமு(ம்)நா னென்னும்
.. உணர்வின் பிடியைத் தவிர்த்திடப் போமோ?
நடனம் புரிவோன் திருவடி அதனை
.. நசித்து நமக்கு நல்கிடும் வீடே,
.... அனந்த் 4-3-2023
No comments:
Post a Comment