Saturday, February 18, 2023

என் வாழ்வே!

 இன்று மகாசிவராத்திரிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.

        திருச்சிற்றம்பலம்

<> என் வாழ்வே! <>

 

           

 

பொன்னம் பலத்தோய்! புவியுள்ளோர்

... பொன்னின் சிறந்த உன்னருளாம்

பொன்னை விடுத்துப் புல்லியபற்

.... பொருளை நாடும் புன்மையென்னே!

துன்னும் அடியார் தூயமனத்

.. துள்ளே நித்தம் நடமாடும்

மன்னே மணியே மயக்கறுக்கும்

... மருந்தே விருந்தே என்வாழ்வே!

                    … அனந்த் 18-2-2023

No comments: