இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> இப்படியும் ஒருவர்! <>
மடியில்
இருபாலர் மங்கையொரு பாலர்
குடியில்
ஒருமூவர் மூவர் – குடியில்
இவர்ஒருவர் ஈடில் ஒருவரிவர் கீழே
தவத்தவர் தாம்நால்வர் காண்.
(பொருள் விளக்கம்: சிவபெருமான் மடியில்
இருபாலகர்களையும் உடலிலொரு பாகத்தில் மனையாளாகிய உமையையும் கொண்டவர்; ஆக இவர் குடும்பத்தில் மூவர் உளர். பிரமன், திருமால் ஆகியோருடன் இவரையும்
சேர்த்து மூவர் என உலகோ வழிகாட்டிரால் அழைக்கப்படுபவர்; இவர் தமக்கு இணையில்லாத ஒருவர்; (தட்சிணாமூர்த்தி குருவாக இவர் ஆலின்
அடியில் அமர்ந்திருக்க, இவர் கீழே சனகர், சனாதனர், சனந்தர், சனத்குமாரர் என்னும் நான்கு தவசிகள்
இருப்பர்.)