இன்று சோமவாரப் பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> அவன் கருணை <>
பாரோர் இகழும் புழுவொன்று
… பரமன் உறையும் பனிமலைமேல்
ஏற முயன்று முடியாமல்
.. இளைத்துக் களைத்து விழுந்தரு
கூற வியலாக் கருணையுடன்
… குருவின் கரங்கள் தாங்கிரணம்
ஆறச் செய்து சிகரத்தில்
.. அமர்த்தி வைத்த அருளென்னே!
..அனந்த் 28-10-2024
No comments:
Post a Comment