இன்று சனிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> உதவிடுவாய் <>
(கட்டளைக் கலித்துறை)
வெள்ளை மனத்துடன் மேதினி தன்னில் விழுந்தபினர்
மெள்ள அதனுள் விடமென ஆசை விரிந்துலகம்
எள்ளும் வகையினில் இன்றா கினன்யான் ஈச!உனை
உள்ள வழியொன்(று) உரைத்திடின் உய்வேன் உதவுவையே !
கொடுத்தாய் குறைஇலாத் தேகமும் வாழ்வும் கொடியனதைக்
கெடுத்தேன் எனினும் குணம்மிகு நல்லோர் குழுநடுவில்
விடுத்தாய் அதனையும் வீணடித் தேன்இனி மேலுமெனைத்
தடுத்தாட் கொளவோர் வகைதெரி யாமல் தவித்தனையே !
பொய்யே துணையெனக் கொண்டவிப் பாவி புனிதனுனை
ஐயே! எனவே அழைத்திடும் அந்த அருகதையை
மெய்யாய் அடைய விளங்குபொன் அம்பல மேடையிலுன்
ஒய்யா ரநடத் துளபொருள் செப்பி உதவுவையே.
..அனந்த்
10-10-2015

No comments:
Post a Comment