இன்று சோமவார ப்ரதோஷச் சிறப்பு நன்னாள்.
எங்கோன் எனவும் எழிலாரும்
.. இடத்தாள் தூக்கி எனவுமுனைக் கங்குல் பகலாய் நினைவிருத்திக்
.. கழறும் அடியார் நடுவிலெனைத்
தங்க வைத்துத் தாய்தனது
.. சவலைக் குழவி தனைநோக்கும்
இங்கி தத்தோ(டு) எனைக்காத்தாய்
.. ஈசா! உன்றன் பரிவென்னே!
திருச்சிற்றம்பலம்
<> எல்லையிலா அருள் <>
எங்கோ தொலைவில் உளன்என்னா(து)
. இறையே! என்றன் கைப்பற்றி
மங்காப் புகழ்சேர் தலங்களுக்கு
... வலியக் கூட்டிச் சென்றாங்குன்
தங்கச் சுடராம் திருவுருவைத்
.. தரிசித் திடநீ வைத்திட்டாய்
மங்கை உடன்ஓர் விடைமீதூர்
.. மன்னே! உன்றன் அருளென்னே!
... வலியக் கூட்டிச் சென்றாங்குன்
தங்கச் சுடராம் திருவுருவைத்
.. தரிசித் திடநீ வைத்திட்டாய்
மங்கை உடன்ஓர் விடைமீதூர்
.. மன்னே! உன்றன் அருளென்னே!
கடலைத் தாண்டி வந்தெனது
.. கொடுமைப் பிறவிக் கடல்கடந்து
விடவோர் வழிசித் சபைநடுவே
.. வேதப் பொருளின் விளக்கமென
நடனம் புரியும் நாதன்தாள்
.. நாடல் எனஅப் பதியிலவன்
உடல்தொட் டிறைஞ்சும் பெரியரெமக்(கு)
.. உணர்த்தச் செய்த உதவியென்னே!
ஏதும் அறியா மூடனென்றன்
.. இதயக் குப்பைக் கூடையிலே
சூதும் வாதும் துர்நினைவும்
.. சுமந்துன் வாயில் வந்தவுடன்
வாது செய்யா தென்னையும்நீ
.. வருவாய் எனவே அழைத்துன்பால்
காதல் பெருக வைத்தவுன்றன்
.. கருணைக் கிணையைக் கண்டிலனே.
எங்கோன் எனவும் எழிலாரும்
.. இடத்தாள் தூக்கி எனவுமுனைக்
.. கழறும் அடியார் நடுவிலெனைத்
தங்க வைத்துத் தாய்தனது
.. சவலைக் குழவி தனைநோக்கும்
இங்கி தத்தோ(டு) எனைக்காத்தாய்
.. ஈசா! உன்றன் பரிவென்னே!
.. ஆன்மச் சொருபம் நம்முள்ளே
தங்கும் உண்மை எனஉரைக்கும்
.. தலமாம் அருணை தனிலென்றும்
மங்கா தொளிரும் ரமணகுரு
.. மகிமை தன்னில் மூழ்கவைத்து
அங்கே உன்றன் ஆலயத்தை
.. அடியேன் காண வைத்ததென்னே!
எங்கும் சைவம் பரவுவண்ணம்
.. இசையோ டுன்சீர் புகழ்குரவர்
தங்கிச் சிறந்த மாமதுரைத்
.. தலத்தில் என்றன் சிறுவயதில்
மங்கை மீனா ளுடன்றன்
.. வடிவைக் காட்டி ஆட்கொண்டாய்
அங்கே மீண்டும் வரவழைத்துன்
.. அழகைப் பருகச் செய்ததென்னே!
இடரைக் களைய வேண்டிடின்இவ்
.. இறைவற் கிணையிங் கில்லைஎனுந்
திடங்கொண் டிலிங்க வடிவிலுனைச்
.. சேவிக் கரகு வரன்தேர்ந்த
இடமாம் இராமேச் சரம்தன்னை
.. எளியேன் மீண்டும் தரிசிக்கப்
படமார் சடையாய்! வாய்ப்பளித்த
.. பரிவில் நெஞ்சம் உருகினனே.
அங்கம் தளர்ந்து வலுவுமிழந்(து)
.. அடியேன் காலம் முடிகையில்என்
பங்கிற்(கு) உன்றன் திருநாமம்
.. பகர ஆற்றா அந்நிலையில்
இங்கே உள்ளேன் என்றுனையென்
.. இதயந் தனிலே காட்டிஎரி
பொங்கும் காட்டில் நீநடனம்
.. புரியும் அழகைக் காட்டுவையோ?
.. அடியேன் காலம் முடிகையில்என்
பங்கிற்(கு) உன்றன் திருநாமம்
.. பகர ஆற்றா அந்நிலையில்
இங்கே உள்ளேன் என்றுனையென்
.. இதயந் தனிலே காட்டிஎரி
பொங்கும் காட்டில் நீநடனம்
.. புரியும் அழகைக் காட்டுவையோ?
(குறிப்பு: அண்மையில் நான் தரிசித்தத் திருத்தலங்களை நினைவு கூரும் வண்ணம் யாத்த பாடல் இது. சிதம்பரத்தில் ஆருத்திரா தரிசன விழா நாட்களில் இருக்கும் பேறும், திருவண்ணாமலையில் பகவான் ஶ்ரீரமணரின் ஜயந்தித் திருநாள், அருணாசலேசுவரர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழாக் காலத்தில் இருக்கும் பாக்கியமும் கிட்டியது).
அனந்த் 23-4-2017
No comments:
Post a Comment