Monday, May 8, 2017

இதுவே காரணம்

திருச்சிற்றம்பலம்
















<> இதுவே காரணம் <>

ஆலயந் தோறும் சென்றுன்னை
.. அடியேன் காணத் துடித்திடுதற் (கு)
...... அடியில் மறைந்த காரணத்தை
.......... ஐயா! உரைப்பேன் செவிமடுப்பாய்

மாலயன் காணா மாயனென  
.. வழங்கும் கதையில் மயங்காது
...மன்றில் ஆடும் உன்னுருவை
....மனத்தில் நிறுத்தி வெளிச்செல்லா(து)  

ஓர்லயப் படுத்தி என்னுள்நீ
..உறையும் இடத்தைத் தேடியங்கே
....உனைஎன் உண்மைச் சொருபமென
.....உணர்ந்தாங் கேநான் ஒடுங்கிடுவேன்

காலமெ லாமிவ் வாறுன்னைக்
..கண்டு களிப்பேன் என்னுமென்றன்
...கனவிந்   நாளே   பலித்திடநீ 
...கருணை புரிந்திட லாகாதோ?

.அனந்த் 8-5-2017   

No comments: