Monday, May 22, 2017

உய்ய வைத்தாய்

                                                              திருச்சிற்றம்பலம்  

   <> உய்ய வைத்தாய் <>
























அழிவதற் காகவே அவனியில் உதித்தபொய் ஆகமிஃ துண்மை யென்றென்
.. அறிவினால் யாவையும் அறிவனென் றகந்தையாம் ஆற்றடிச் சேற்றில் ஊறி

வழியிது காணென வந்தவர் சென்றவர் வாய்வழி வந்த சொல்லை
.. மாறிலா மெய்யென மதித்தவர் பின்னர்யான் சென்றவர் வலையில் வீழ்ந்து

அழுதழு தோய்ந்தபின் ஐய!நின் அடியவர் அருளிய வாச கத்தின்
..  அருமையும் பெருமையும் அறிந்தவர் தம்மையங்(கு) அனுப்பிநீ காத்த தென்னே!

தொழிலினி எனக்குன தொண்டலால் வேறிலை தோடுடைச் செல்வ! தில்லைச்
.. சொன்னமே! ஆலவாய்ச் சொக்கனே! சோணமா மலையில்வாழ் சோதி யானே! 

(ஆகம் = உடல்; சோண மாமலை= அண்ணாமலை)

..அனந்த் 23-5-2017

No comments: