இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> ஆட்கொண்ட வகை <>
இல்லையினி மேலுமொரு இறைவடிவ மெ னும்வகையில்
பல்வேறு தெய்வங்கள் பால்நாடிச் சென்றவனைச்
சொல்லாலே எதனையுமே துலக்காமல் க ண்மூடிக்
கல்லாலின் கீழிருக்கும் கடவுளு ன்பால் இழுத்துவந்தாய்.
கரும்பதுதன் சுவையாலே கட்டெறும் பைக் கவர்வதுபோல்
இரும்பினைத்தன் ஆற்றலினால் காந்தம்அரு(கு) ஈர்ப்பதுபோல்
துரும்பினும்கீழ்ப் பட்டபெருந் துட்டனெனைத் தொலைவி லுள்ள
பெரும்புலியூர் பொன்னவைக்குப் போ கவைத்து விழுங்கிவிட்டாய்
கண்ணின்நீ ரருவியிலுன் காலிணையை நீராட்டி
வெண்ணீற்றுப் பூச்சாலுன் மேனியை நான் எழில்படுத்தி
உண்ணெக்கு நின்றுருகி உளறலெலாம் தோத்திரமாய்ப்
பண்ணினின்றிப் பாடியுனைப் பரவவை த்தும் பார்த்தனையே.
அனந்த் 27-4-2018 - பிரதோஷ நன்னாள்.
No comments:
Post a Comment