Tuesday, January 21, 2020

<> நந்தியெனும் ஞானி <>

.                                திருச்சிற்றம்பலம்

                                  <> நந்தியெனும் ஞானி <>

Sivan-Nandhi@our Temple.JPG                Natarajar@our Temple.JPG
     
ஐயனுக்(குஎதிரிலே அமர்ந்தவன் கோலமே அன்றிமற் றெதையும் காணா(து)
... அமர்ந்தொரு அசைவுமி லாததோர் நிலையிலே அன்பர்கள் நாளும் காணும்
மெய்யடி யாரினுள் மேலவ ராய்த்திகழ் நந்தியெம் பெருமான் வேதம்
… விரிக்கொணாப் பிரமமாய் விளங்கிடும் ஈசர்கட் கீசனைத் தம்முள் காணும்
துய்யநற் சுகத்தினில் தோய்ந்துள மாண்பினைத் தொழும்பரும் உணர வைக்கும்
… சூக்குமம் அறிந்துநாம் தொழுதெழு வோமவர் திருவுருச் சுற்றி வந்து
கைகளைக் கூப்பிநம் காலமெல் லாம்படும் கட்டமாம் பிறப்பி றப்பைக்

.. கடந்திடும் வழியினைக் காட்டென வேண்டியக் கூத்தனோ டொன்று வோமே

 (இணைப்புப் படங்கள்: இங்குள்ள (டொராண்டோ) ஸ்ரீ சிவஸத்யநாராயண ஆலயத்தில் அண்மையில்  எடுத்தவை).
..அனந்த்  22-1-2020 பிரதோஷ நன்னாள்

No comments: