Wednesday, December 31, 2025

                  திருச்சிற்றம்பலம் 

                     <> என் கதி <>


எண்ணச் சுழலின் நடுவேநான்

.. இங்கும் அங்கும் அலைப்புற்றேன்


அண்ணா மலையாய்! அனுதினமும்

.. அடியேன் லகில் உழன்றலைந்துள்

 

புண்ணா னேன்நான்  இனியுமருள்

.. புரியா திருந்தால் பாழாவேன்

 

கண்ணா ளாஉன் காலிணையே

.. கதியென் றடைந்தேன் காப்பாயே.

                         … அனந்த் 1-1-2026

 

அனந்த்

Wednesday, December 17, 2025

 திருச்சிற்றம்பலம்


<>பூசை ஏற்பான்<>


25-5-2014 PrdOsham- Sivan alankaram.jpg

அப்பிலே மூழ்கடித்(து) ஆங்கதன்பின் பல்வகையாய்

ஒப்பனை செய்(து)உவகை உற்றிடுங்கால் - தப்பியவன்

ஓசைசெயா தோடிச் சுடுகாட்டில் ஆடிப்பின்

பூசையை ஏற்பான் புகழ்ந்து.

அனந்த் 17-12-2025

Monday, December 1, 2025

இன்று பிரதோஷ நன்னாள். 

 திருச்சிற்றம்பலம்.   


                                       <.> அவன் நோக்கம் <>


                   


ஆலங் குடிமேவும் ஐயனவன் அன்னையவள் 

 கோலங் குறைக்கஅடி கோலியது  குணவதியின் 

 காலங் கடந்துநிற்கும் கவிதைகளைக் காதாரச் 

 சாலப் பருகுதற்குத் தான்கொண்ட தாகமன்றே.


                                                                       ... அனந்த் 02-12-2025