திருச்சிற்றம்பலம்
<> தியாக மூர்த்தி <>
தத்துவப் பொருளென உருவிலா
அறிவெனத்
.. தனித்தவோர் நிலையை
விட்டுத்
… தரணிவாழ் மானிடர் தமதிடர்
களையுமோர்
…. தயையினால் ஐய னேநீ
அத்தனும் அன்னையும் இன்றிய
நாதியாய்
… ஆங்குதித்(து) அதைய டுத்தே
….. ஆசையால் மலைமகள்
கைத்தலம் பற்றினாய்
…… அதன்விளை வாக வந்த
புத்திரர் இருவருள் மூத்தவன்
ஆனையாய்ப்
… பின்னவன் ஆண்டி யென்று
புவனியோர் ஏசினும் பொறுத்தனை
பசிக்கையில்
… புசிப்பதற் குணவு மின்றி
இத்தரை மீதிலே இரக்கவும்
செய்தனை
.. இத்தகைத் தியாகம் எல்லாம்
… எமக்கென ஏற்றநின்
கருணையின் எல்லையை
…. என்சொலி ஏத்து வேனே.
..அனந்த்
26-12-2016 சோமவாரப் பிரதோஷம்