<> கூத்தின் இரகசியம் <>
பித்தனென் பேரெனப்
பெருமையாய்ப் பேசிமுன் பேதைசுந் தரனின் முன்னம்
.. பிடிவாதம் செய்(து)அவன்
அடிமையாம் உனக்கெனப் பிறரைநீ
நம்ப வைத்தாய்
அத்தனை பிட்டையும்
அளியெனக் கென்றொரு கிழவிபால் பேரம் பேசி
.. அவளிட்ட வேலையைச் செய்திடா(து) உலகுளோர் அடிபடு மாறு செய்தாய்
கத்துகான் நரிகளைப்
பரிகளாய்க் காட்டிஅப் பாண்டிய மன்னன் தந்த
.. கணக்கில்லாப் பரிசெலாம் பெற்றபின் மீண்டுமப் பரிநரி ஆகச் செய்தாய்
இத்தனை கூத்தையும்
இங்குளோர் அறிந்திலார் என்றுநீ எண்ணி யன்றோ
… இவண்வந்து பொதுவிலே ஈச!நீ தவழ்சிரிப் புடன்நட மாடி நிற்பாய்?
அனந்த் 12-11-2020

No comments:
Post a Comment