இன்று தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்புடன் சேர்ந்த பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<>
நிம்மதி நிலவிட அருள் <>
<>
நிம்மதி நிலவிட அருள் <>
உலகெங்கும் போர்புரிய உறுதிகொண்ட அரசினரின்
.. உறுமலும் அதுவிளைக்கும் உற்பாத மும்காணும்
நிலைமையுள்ள இந்நாளில் நீதியினை நிலைநாட்டி
.. நிம்மதியை நிலவிடச்செய் நேசமிகு
’பராபவ’த்தில்*
கலகமெலாம் தீர்ந்தொழிந்து காசினியோர் களிப்பெய்தக்
.. கனகசபை நடுவிலெழில் நாட்டியமொன் றா(டு)ஈசா
அலைகளெல்லாம் ஓய்ந்துன்றன் அடர்சடையுள்
அடங்கிடு(ம்)அவ்
.. வான்நதிபோல் உன்னுள்ளே அடங்கிடநீ
அருள்வாயே.
.. அனந்த் 14-4-2024
(பராபவத்தில் - -> இது பராபவம்
என்னும் பெயர் கொண்ட தமிழ்ப் புத்தாண்டைக் குறிப்பது; வான்நதி -> ஆகாச கங்கை)
No comments:
Post a Comment