Tuesday, April 28, 2026

  

 இன்று பிரதோஷ நன்னாள்.

திருச்சிற்றம்பலம் 


            <> உய்ய அருள் <>














இன்பப் பெருக்காய்நீ என்றுமென்றன் உள்ளிருக்கத்
.. துன்பக் கனலில்நான் துடிப்பதுமேன் பரமேசா

அன்பின் திருவுருவாய் அத்தனென நீயிருக்க
.. வம்புச் சுழலில்நான் வீழ்வதுமேன் பரமேசா

தன்பால் வருவோர்க்குத் தாயின்மே லோனென்று
.. சாற்றும் அடியார்தம் சொற்கேட்டேன் பரமேசா

ன்போல் இழிந்தோனை இதுவரைநீ ண்டிலையென்(று)
.. உரையா(து) அருள்புரியின் உய்வேன்யான் பரமேசா

                                                    …. அனந்த் 29-4-2026 

(வாய்பாடு தேமா காய்  காய் காய் தேமா காய் காய் காய்:
தாயுமான சுவாமிகளின் ’பராபரக் கண்ணி’யின் அமைப்பை ஒட்டியது )

               

 


No comments: